fbpx

Savukku Shankar | “சவுக்கு சங்கருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி..” மேலும் 2 வழக்குகளில் கைது.!! வெளியான புதிய தகவல்.!!

காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்(Savukku Shankar) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சவுக்கு சங்கரின் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு பின் மேலும் 2 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்(Savukku Shankar) கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் சவுக்கு சங்கரின் கையை உடைத்ததாக அவரது வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் சிகிச்சைக்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து காவல்துறையினர் சவுக்குசங்கரை பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சவுக்கு சங்கருக்கு கையில் எந்த மாதிரியான காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து அறிய ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் பிறகு காவலர்கள் மத்திய சிறைக்கு சவுக்கு சங்கரை அழைத்துச் சென்றனர்.

காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசாரணை செய்வதற்காக சைபர் கிரைம் காவல்துறையினர் 5 நாள் அனுமதி கேட்டனர். இது தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் மற்றும் வீரலட்சுமி ஆகியோர் பதிவு செய்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக கோவை மத்திய சிறைக்கு சென்ற சென்னை காவலர்கள் இந்த 2 வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். மேலும் அவரை கைது செய்ததற்கான உத்தரவையும் சவுக்கு சங்கரிடம் காவல்துறையினர் வழங்கினர்.

Read More: அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட ‘Apple Vision Pro’ ஹெட்செட்.!! சென்னை மருத்துவர்கள் புரட்சி.!!

Next Post

2024 இறுதி வரை பஜ்ரங் புனியாவை இடைநீக்கம் செய்த உலக மல்யுத்த அமைப்பு..!

Thu May 9 , 2024
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை NADA இடைநீக்கம் செய்ததை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதி வரை அவரை இடைநீக்கம் செய்வதாக ஐக்கிய உலக மல்யுத்தம் (UWW) அமைப்பு அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங், தகுதிச் சுற்றில் ஊக்க மருத்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதால், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறத் தவறிவிட்டார். அவரது போட்டிக்குப் பிறகு, அவர் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படாமல் நிகழ்விலிருந்து […]

You May Like