fbpx

பினாமி பெயரில் சொத்து வாங்கிய சவுக்கு சங்கர்…! போட்டுடைத்த மனைவி…!

ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன..? என அவரது மனைவி நிலவு மொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்களுக்கு மத்தியில் வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும். ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன..? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். தினமணியில் வந்த மாத ரூ.10,000 சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைத்தது.

மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு ரூ.2000 வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றார். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள் ஆகும். அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை. தூத்துக்குடி கலவரத்திலிருந்து, ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கு இல்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதிகாத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது.

4 மாத குழந்தையுடன், எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கு தளத்தில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது VAO வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டு தூக்க வழிவகை செய்வேன் எனவும் மிரட்டினார். அதன் பின்பு, அவன் சம்மந்தப்பட்டவற்றை முழுவதுமாய் நிராகரித்தேன். எவ்வித பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை, ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன். அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்கு பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காகவே அவர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வளர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாதாரண ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா..? என் கேள்வி எழுப்பி உள்ளார் .

Vignesh

Next Post

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்!

Wed May 15 , 2024
PM Modi: 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய தேர்தல் தற்போதுவரை 4 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், 5 வது கட்டத் தேர்தல், 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் மே 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் மொத்தம் 695 பேர் போட்டியிடுகின்றனர். பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிஷா, […]

You May Like