எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; வாட்ஸ்அப் மூலம் உங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை இனி நீங்கள் பெற முடியும். உங்கள் வசதிக்கேற்ப இந்த சேவையைப் பெறலாம். சேவையைப் பெற வாட்ஸ்அப் மூலம் 9022690226 இல் “ஹாய்” என்று அனுப்பவும். அப்படி அனுப்பினால் உங்களுக்கான தகவல்கள் அனுப்பப்படும் என்று வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.