fbpx

பியூட்டி பார்லருக்கு நோ சொல்லுங்க.! வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பரான பேஷியல்.! இந்த ரெண்டு பொருள் போதும்.!

எல்லா வயதினருக்கும் தங்கள் முகம் பொலிவுடனும் பளபளப்பாக இருப்பதே விரும்புவார்கள். ஆனால் நமது பணிச்சுமை மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக பெரும்பாலானவர்களுக்கு முக அழகை பராமரிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களும் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுப்பதில்லை. இது போன்ற குறைகள் இல்லாமல் நம் சமையலறையில் இருக்கும் பீட்ரூட்டை வைத்து முகத்தை எப்படி பொலிவுடன் மிளிரச் செய்யலாம் என பார்ப்போம்.

பீட்ரூட்டில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும் பீட்ரூட் அதிக ஆன்டிஆக்சிடென்ட்களை கொண்ட ஒரு காய்கறியாகும். பீட்ரூட் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளை மறைய வைப்பதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வளர்ச்சியை போக்குவதற்கு உதவுகிறது. இதனை கற்றாழையுடன் சேர்த்து பயன்படுத்தும் போது முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பீட்ரூட் மற்றும் கற்றாழை இவை இரண்டையும் பயன்படுத்தி சருமத்தின் அழகை மேம்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு கலக்க வேண்டும். இவற்றை நன்றாக கலந்த பின்னர் இந்தக் கலவையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் ஊற விட்டு கைகளால் முகத்தில் நன்றாக மசாஜ் செய்து விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர முகத்தில் ஏற்படும் பளபளப்பை நீங்களே காண்பீர்கள்.

முகப்பொலிவிற்கு பீட்ரூட் உடன் முல்தானி மட்டி சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும். முல்தானி மட்டியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு பீட்ரூட்டைச் சாறு எடுத்து சேர்க்க வேண்டும். இதனை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். உங்களுக்கு விருப்பம் என்றால் இதனுடன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கலாம். இவற்றை நன்றாக கலந்த பின் இந்த கலவையை எடுத்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின்னர் முகத்தில் லேசாக தண்ணீர் சேர்த்து நன்றாக மசாஜ் செய்த பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வர முக அழகு அதிகரிப்பதோடு சரும ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

Next Post

இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? முழு விவரம்

Thu Nov 30 , 2023
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான […]

You May Like