இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் முதன்மையானதாக விளங்கி வருகிறது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்ற வங்கிகள் பலகட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ. கார்டு அதன் ரிவார்டு புள்ளிகள் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், இனி Swiggy, ஏர் இந்தியா டிக்கெட்டுகளை வாங்கினால், முன்பை விட குறைவான ரிவார்டு புள்ளிகளையே பெற முடியும்.
மேலும், இந்த புதிய விதிகள் Simply CLICK SBI கார்டு, ஏர் இந்தியா SBI பிளாட்டினம் கிரெடிட் கார்டு மற்றும் ஏர் இந்தியா SBI சிக்னேச்சர் கிரெடிட் கார்டு ஆகிய கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும். இந்த கார்டு வைத்திருப்போர் தற்போது ஸ்விக்கியில் செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 10X வெகுமதி புள்ளிகளைப் பெறுகிறார்கள். ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது 5X புள்ளிகளாகக் குறைக்கப்படும்.
ஆனால், அப்பல்லோ 24X7, BookMyShow, Cleartrip, Domino’s, IGP, Myntra, Netmeds மற்றும் Yatra ஆகியவற்றில் செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு வழக்கம்போல், 10X வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். மேலும், விமான நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது செயலி மூலம் செய்யப்படும் ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஒவ்வொரு ரூ.100-க்கும் 15 புள்ளிகளைப் பெறுகிறார்கள். ஆனால், இனி 5 புள்ளிகளாகக் குறைக்கப்படும்.
Read More : அடிக்கிற வெயிலுக்கு Ice Cream-ஐ அதிகம் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? எச்சரிக்கையா இருங்க..!! ஆபத்து..!!