fbpx

1994-ல், ரூ.500க்கு தாத்தா வாங்கிய SBI பங்குகள்..! லட்சங்களை பெற்ற பேரன்!

எஸ்.பி.ஐ. வங்கியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பங்கு வாங்கி இப்போது லாபம் பெற்ற பேரன், அது தொடர்பாக நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதலத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

சண்டிகரில் வசிக்கும் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தன்மய் மோதிவாலா வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மிகப்பழைய பங்கு சான்றிதழ் ஒன்றை கண்டெடுத்தார். அதில் அவரின் தாத்தா 1994-ம் ஆண்டு ரூ.500 மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியுள்ளார்.

1994-ம் ஆண்டு ரூ.500 முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. 30 ஆண்டுகளில் அவரது எஸ்பிஐ பங்குகள் மதிப்பு 750 மடங்கு அதிகரித்துள்ளது. .

இதுகுறித்து அந்த மருத்துவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “குடும்ப சொத்துக்களை எடுக்கும் போது இந்த சான்றிதழ்கள் கிடைத்தது. தற்போது இதன் மதிப்பு ரூ.3.75 லட்சம் எனவும், இது பெரிய தொகை இல்லை என்றாலும், 30 ஆண்டுகளில் 750 மடங்கு லாபம் என்பது உண்மையில் பெரியது” என்று பதிவிட்டுள்ளார்.

பங்குகள் அனைத்தும் நிச்சயம் டிமேட் கணக்குகளில் தான் இருக்க வேண்டும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த பங்கு சான்றிதழை உரிய ஆலோசகர் உதவியுடன் டிமேட் பங்குகளாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கையெழுத்து, முகவரி என பல சிக்கல் இருந்ததால் இதை டிமேட் பங்குகளாக மாற்ற பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

இதன் பிறகும் அந்த பங்குகளை அவர் வைத்துக் கொள்ளவே முடிவு செய்துள்ளாராம். தற்போது பண தேவை இல்லை என்பதால் அதை விற்க போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது ஸ்டோரி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Next Post

BJP-க்கு புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு அளித்த எடப்பாடி...!

Wed Apr 3 , 2024
இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா..? உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும்” என மத்திய அரசு கூறியது. நாடாளுமன்றத்தில் […]

You May Like