தேசிய சுகாதார ஆணையம், தனது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் மருத்துவமனைகளில் ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புற நோயாளிகள் பிரிவில் உடனடி பதிவு சேவைகள் நோயாளிகளுக்கு, வழங்கப்படுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே 10 லட்சம் நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.
கடந்த மாதம் (பிப்ரவரி 23, 2023) மட்டும் ஐந்து லட்சம் நோயாளிகள் இதில் இணைந்துள்ளனர்.ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை குறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “டிஜிட்டல் தீர்வுகளை பயன்படுத்தி சீரான மருத்துவ விநியோக சூழலியலை உருவாக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.