நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நலன் மற்றும் ஆதரவிற்காக, பல திட்டங்கள் நடந்து வருகின்றன, அதன் நேரடி பலன்கள் தொலைதூர விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றனர்.. உதாரணமாக, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம், மானிய விலை டீசல் திட்டங்கள் என பல திட்டங்களை சொல்லலாம்.. அந்தவகையில் விளிம்புநிலை விவசாயிகளுக்கு கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) யோஜனா அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இந்த அட்டையின் மூலம் நாட்டின் விவசாயிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். இது வேறு பல நன்மைகளையும் கொண்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் இப்போது கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை என்று 2 வங்கிகள் அறிவித்துள்ளன… யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பெடரல் வங்கி இரண்டும் இந்த திட்டத்தைத் தொடங்கின. இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் முறையில் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கத் தொடங்கியுள்ளனர். விவசாய நிலம் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பதற்காக வங்கிக் கிளையில் ஆஜராக வேண்டிய தேவையை நீக்குவதாக வங்கிகள் அறிவித்துள்ளன.
இந்த திட்டங்களின் கீழ், கிராமப்புறங்களில் வங்கிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் வங்கி இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என யூனியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப விவசாயிகள் முன்னேற வேண்டும் என்றும் அரசு முன்பே குறிப்பிட்டுள்ளது. விவசாயிகள் இப்போது நில ஆவணங்களை சரிபார்க்க வங்கிக்கு செல்ல தேவையில்லை. வங்கியே விவசாய நில ஆவணத்தை ஆன்லைனில் சரிபார்க்கும்.