fbpx

ஆதிதிராவிடர் Ph.D மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..! விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) புதுப்பித்த்ல் (Renewal) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற முகவரியில் யாவரும் பதிவிறக்கி இணையதள பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2025 மாலை 5.45 மணிக்குள்,”இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005″ என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Scholarship for Adi Dravidian Ph.D students

Vignesh

Next Post

இன்று சனிக்கிழமை.. மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!! சனியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. 

Sat Jan 4 , 2025
Don't make these mistakes on Saturday.. you will surely incur the wrath of Lord Shani.

You May Like