fbpx

தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்…..! பெற்றோர்கள் கவலை ஏன் தெரியுமா…..?

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

நோட்டு, புத்தகம், டிபன் பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்க குழந்தைகள் ஆர்வத்துடன் கடைகளை முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் கல்வி உபகரணங்களின் நிலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

சென்ற வருடம் புத்தகப் பைகள் 500 முதல் 700 வரையில் விற்பனையாளர் நிலையில் தற்போது 1000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். அதோடு ஒரு வீட்டில் 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரையில் செலவாகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். சென்ற வருடத்தை விடவும் பேனா, பென்சில் இங்க் பாட்டில், ஏ4 ஷீட், 25 பைசா லாங் சைஸ் நோட், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்திருக்கிறது.

சென்ற வருடம் 10 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்த புத்தகங்கள் உரிமையாளர்கள் இந்த வருடம் 15 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்திருப்பதாகவும் விலை ஏற்றம் காரணமாக, குறைந்த அளவிலேயே பள்ளி பாட புத்தகங்களை வாங்க வருவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கினாலும், பள்ளி பை உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் கட்டாயம் வெளியில் தான் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா….? மத்திய அமைச்சரின் பதில் என்ன….?

Sun Jun 11 , 2023
நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு நிலையில் மாற்றங்கள் நிகழ்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தான் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன் ஒரு வருடத்திற்குள் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய […]

You May Like