திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் 5 வயதான சசிதரன், ஏலகிரி மலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பள்ளிக்கு தினமும் பள்ளி வாகனத்தில் சென்று வந்துள்ளான். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வாகனத்தில் ஏறி கதவின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளான். சிறுவனுடன் மற்ற மாணவ, மாணவிகளும் பள்ளி வாகனத்தில் ஏறியுள்ளனர்.
மாணவர்கள் பள்ளி வாகனத்தில் ஏறிய பிறகு, டிரைவர் வாகனத்தின் கதவை சரியாக அடைக்கவில்லை. சரியாக கதவை அடைப்பதர்க்குள், டிரைவர் வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் கதவின் அருகே அமர்ந்து இருந்த சசிதரன் தவறி கிழே விழுந்துள்ளான். கீழே விழுந்த சிறுவன், சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொது மக்கள், வாகனத்தை நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த, ஏலகிரி மலை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டிரைவர் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என உறுதி அளித்ததின் பரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.