தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.. இதனால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாரு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது..
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. நேற்று முதல் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சிசிக்க்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. அவர் டிஸ்சார்ஜ் ஆக 2 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது..