fbpx

பல பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவி; வகுப்பறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சேலம் மாவட்டம், புதூர் குட்டகரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவருக்கு 14 வயதான மேகவர்த்தினி என்ற மகள் உள்ளார். தாய் இல்லாததால் தாத்தா- பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல், மேகவர்த்தினி நேற்று காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது தோழிகளிடம், தான் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வந்துள்ளதாகவும், தனக்கு மயக்கம் வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழிகள், இது குறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். அதற்குள், அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர்கள் மேகவர்த்தினியை உடனடியாக மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மேகவர்த்தினியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மேகவர்த்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் மாணவி பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

"படிச்சும் வேலைக்கு போக முடியல" விரக்தியில் இளம்பெண் செய்த காரியம்..

Tue Oct 10 , 2023
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், இவரது மனைவி, 2 குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இவரது மூத்த மகள் 21 வயதான கவுரி, நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பயிற்சி பெற்று வந்துள்ளார். பின்னர், புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் […]

You May Like