கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 32 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அதே பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு முடித்திருக்கிறார் இந்த நிலையில் அந்த மாணவி 18 வயது நிறைவடைந்து தற்போது 19 வயதை அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த மாணவி தோழி ஒருவரை பார்த்து விட்டு வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆன பின்னரும் ஒவ்வொரு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. கடைசியாக மாணவியின் தோழியிடம் விசாரித்ததில் அதே பள்ளியில் வேலை பார்த்து வந்த 32 வயது ஆசிரியருடன் அவர் ஓட்டம் பிடித்து விட்டார் என்பது தெரிய வந்தது.
இதனை அறிந்து கொண்ட பெற்றோர் மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போன மாணவி ஆசிரியருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு மாணவியின் பெற்றோரை காவல்துறையினர் வரவழைத்தனர். அப்போது மாணவி ஆசிரியர் உடன் இருப்பதை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். மேலும் படிக்க வேண்டிய வயதில் திருமணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர் செல்வதில் உறுதியாக இருந்தார் என்று கூறப்படுகிறது. அதில் ஆசிரியரின் பெற்றோர் கேட்டுக் கொண்டதன் பேரில் தங்களது மகளை ஆசிரியருக்கு திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டனர் மாணவியின் பெற்றோர்.
இது குறித்து 2 வீட்டாரும் காவல்துறையிடம் கடிதம் எழுதிக் கொடுத்தனர். திருமணம் நடைபெறும் வரையில் மகள் எங்களுடைய வீட்டில் இருக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் ஆவதற்கு மாணவியும் ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தார்கள் இதனை தொடர்ந்து மாணவி தன்னுடைய பெற்றோருடன் சென்றார் ஆசிரியருடன் மாணவி ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.