ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் ஆடி அமாவாசை பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் சேதுக்கரை, தேவிப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து, போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் காரணமாக மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.