fbpx

வெப்ப அலை காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிப்பு!… எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

உத்தரப்பிரதேசம் மற்றும் பாட்னாவில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை வெப்ப அலை காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அலைக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளன. சில நகரங்கள் விடுமுறையை நீட்டித்துள்ளன. உத்தரப்பிரதேசம் மற்றும் பாட்னாவில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை வெப்ப அலை காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளன. அந்த வகையில் பள்ளி விடுமுறையை நீட்டித்துள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெப்பச்சலனம் காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறையை ஜூன் 26-ஆம் தேதி வரை நீட்டித்து சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகளை கருத்தில் கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோடை விடுமுறையை நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கூறினார்.

வெப்பச்சலனம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஜூன் 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சர்வதேச யோகா தினமான ஜூன் 21 அன்று பள்ளிகள் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச அடிப்படைக் கல்விக் கவுன்சில் அனைத்து மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய அறிவிப்பில், ஜூன் 27-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

கடும் வெயிலின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஜூன் 18ம் தேதி வரை மூட பாட்னா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பாட்னாவில் உள்ள அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஜூன் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாட்னா மாவட்டத்தின் அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் (8ஆம் வகுப்பு வரை) ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், 9-12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் ஜார்க்கண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித் துறை அறிவிப்பின்படி ஜூன் 17 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜார்க்கண்ட் அரசு ஜூன் 12 முதல் 3 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தது.

Kokila

Next Post

இதுதான் எனது கடைசி கட்டம்!... அடுத்த உலகக் கோப்பைக்கு நான் செல்லமாட்டேன்!... லியோனல் மெஸ்ஸி!

Thu Jun 15 , 2023
கத்தார் உலகக் கோப்பை தான் கடைசியாக விளையாடும் போட்டி என்று அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை பிபா உலக கோப்பை போட்டி நடைபெற்றது இதில் பிரான்ஸ் அனியை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வென்றது. இதனையடுத்து, ஜூன் […]
அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி..!! வெற்றியை கொண்டாட இன்று பொதுவிடுமுறை அறிவித்தார் மன்னர்..!!

You May Like