fbpx

ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…! அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அதிரடி உத்தரவு…!

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி அன்றும் , 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.எனவே , மேற்கண்டுள்ள நாட்களில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் படைத்த சாதனை!... ரெக்கார்ட்ஸ் லிஸ்ட் இதோ!

Fri Jun 9 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இதில், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் […]

You May Like