பிரதமர் மோடியின் பரப்புரைக்கு அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தொலைவு வாகன பேரணி நடைபெற்றது.
இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். அதேவேளையில், பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கோவை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பிரதமர் மோடியின் பரப்புரைக்கு அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை தவறாக வழி நடத்தியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது ஒரு பிரிவில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.