fbpx

School | 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் (Shiv Nadar Foundation) இணைந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

மேலும், ‘மணற்கேணி’ செயலியை, கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”இன்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ஆம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மணற்கேணி செயலி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டது. Web portal இல் கொண்டு வந்து கணினியில் பார்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒரு concept எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். செய்முறை கல்வியை 4 ஆம் வகுப்பு வரை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் டெக்னாலஜியை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தது. அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறோம்.

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான டார்கெட்டை அதிகம் சேர்க்க முடிவு செய்துள்ளோம். நாளை அதுகுறித்த முடிவு செய்யப்படும். இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்து 1.5 லட்சம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியதால் ஷாமியான அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஹால் டிக்கெட்டை மறந்து விட்டு பதற்றம் அடைய கூடாது என்று, அதை தேர்வு எழுதும் போது கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்” என்று கூறினார்.

Read More : House | வீட்டுமனைப் பதிவுகள்..!! இனி இப்படித்தான் இருக்கும்..!! ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு..!!

Chella

Next Post

Aadhaar | மாணவர்களே..!! நாளை (பிப்.23) சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! எதற்கு தெரியுமா..?

Thu Feb 22 , 2024
தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவற்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில், இதன் காரணமாக ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் […]

You May Like