fbpx

#Breaking: கனமழை… இந்த 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! ஆட்சியர் சற்று முன் அறிவிப்பு…!

கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

மாத சம்பளம் ரூ.36,000 - 63,000 வரை..!! SBI வங்கியில் சூப்பர் வேலை..!! உடனே இதை செய்யுங்க..!!

Thu Nov 3 , 2022
இந்தியாவில் முன்னணி வங்கிகள் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் Circle Based Officers (CBO) 1,422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 1,400 பணியிடங்கள் நேரடியானது. 22 பணியிடங்கள் பேக்லாக் செய்யப்பட்டவையாகும். பணியின் விவரங்கள்… நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க […]

You May Like