தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஹரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பஞ்ச்குலா மாவட்ட கல்வி அதிகாரி வெளியிட்டார். மாநிலத்தில் நிலவும் கனமழை காரணமாக, பஞ்ச்குலா துணை ஆணையர் டாக்டர் பிரியங்கா சோனி முன்னதாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.
வெள்ள நிலைமையை வைத்து, ஹரியானா முன்னதாக இராணுவத்திடம் மீட்பு நடவடிக்கைக்கு உதவி கோரியது. மாநிலங்களின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிர்வாகத்திற்கு உதவ இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.