திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று செயல்படும்.
உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்ய அவ்வப்போது சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல் பட மாவட்ட கல்வி அலுவலருக்கு உரிமை உண்டு அதன்படி கடந்த மாதம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளிகள் இயங்கிய நிலையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரமும் சனிக்கிழமையான இன்று திருவாரூரில் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழக்கம் போல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.