fbpx

தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வெயில் மற்றும் மழை பெய்து வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூன் 6ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : Cyclone | நாளை உருவாகிறது புயல்..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

English Summary

The school education department has announced that all schools will open on June 6 after the summer vacation in Tamil Nadu.

Chella

Next Post

Let's Move India : பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு முன்னதாக  'இந்தியாவை நகர்த்துவோம்' பிரச்சாரத்தை தொடங்கியது IOC..!

Fri May 24 , 2024
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) லெட்ஸ் மூவ், இந்தியாவைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, இயக்கத்தின் மகிழ்ச்சியைத் தழுவவும் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு பாரிஸ் 2024 இல் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களைக் கொண்டாடவும் அனைவரையும் அழைக்கிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் டிஜிட்டல் சவால் மூலம் இயக்கத்தில் சேரலாம். சமூக ஊடகங்களில். ஜூன் 23ஆம் தேதி ஒலிம்பிக் தினத்தையொட்டி, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அபினவ் பிந்த்ரா அறக்கட்டளையுடன் இணைந்து, பிராந்திய பள்ளி முயற்சிகளில் […]

You May Like