மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வெயில் மற்றும் மழை பெய்து வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தான், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, வகுப்பறைகள் பாடம் நடத்த ஏதுவாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!