fbpx

அடுத்த 4 நாட்கள் சுட்டெரிக்கும் வெயில்!… வானிலை மையம் அலெர்ட்!

பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து தற்போது கூடுதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூடுதல் வெப்பத்தினால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பொழியும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரையிலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் ஒரு சில பகுதிகளில் கூடுதல் வெப்பத்தால் லேசான மழை பொழிவு இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

BREAKING | ஆற்றில் கவிழ்ந்த கார்..!! சைதை துரைசாமியின் மகன் மாயம்..!! ஓட்டுநர் பலி..!!

Mon Feb 5 , 2024
இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயமாகியுள்ளார். இமாச்சல் பிரதேச மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார். மேலும், இந்த விபத்தில் ஓட்டுநர் தஞ்சின் உயிரிழந்த நிலையில், வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவரது நிலை என்ன என்பது குறித்து இதுவரை […]

You May Like