fbpx

கொளுத்தும் வெயில்!. பள்ளிகள் மூடல்!. அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்!. வெப்பநிலை ஆபத்தான அளவை எட்டும் என எச்சரிக்கை!

Heat: பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மணிலாவிலும் அதன் அருகே இருக்கும் வேறு இரு நகரங்களிலும் காற்றின் வெப்பநிலை, ஈரப்பத அளவீடான வெப்பக் குறியீடு ஆபத்தான அளவை எட்டும் என அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. இந்த வெப்பச் சலனத்தால் நீர்ச்சத்துக் குறைபாடு, வெப்பத் தாக்குதல் போன்றவை மக்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

அதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் பகல் பொழுதில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்க்குமாறு அது தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பிலிப்பீன்சின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசியது. மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகளுக்காக வருவது தவிர்க்கப்பட்டது. இதனால் மில்லியன் கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

Readmore: அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட வீடியோக்கள்!. 18 வயதுக்குட்பட்டவர்கள் இதை பார்க்க முடியாது!. யூடியூப்பில் புதிய கட்டுப்பாடுகள்!.

English Summary

Scorching heat!. Schools closed!. People should not go out unnecessarily!. Warning that temperatures will reach dangerous levels!

Kokila

Next Post

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை..!! தேர்வு கிடையாது..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!!

Wed Mar 5 , 2025
An employment notification has been issued to fill 51 Circle Based Executive vacancies in the Indian Postal Department, also known as India Post Payments Bank.

You May Like