fbpx

கொளுத்தும் வெயில்..!! தமிழ்நாட்டில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை..?

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பநிலை காரணமாக ஒடிசாவில் இன்று முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் ஈரோடு, கரூர் மற்றும் மதுரை உட்பட 8 இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் முன்கூட்டியே விடுமுறை வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

இப்படி கூட உங்களுக்கு மோசடி ’லிங்க்’ வரும்..!! க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியாகிவிடும்..!!

Wed Apr 12 , 2023
சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிய மோசடியாக, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது […]

You May Like