fbpx

சுட்டெரிக்கும் வெயில்!… சருமத்தை பாதுகாக்கும் தக்காளி மாஸ்க்!… ஈஸி டிப்ஸ் இதோ!

கோடைகாலத்தில் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பேஸ் மாஸ்க்குகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடைகாலம் காலத்தில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் நமது தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகப்படியான வெயிலின் தாக்கம் நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில பேஸ் மாஸ்க்குகள் பற்றி பார்ப்போம். தக்காளியில் நமது சருமத்தை பளபளவென மாற்றாக கூடிய தன்மை உள்ளது. தக்காளி கடுமையான சூரியக் கதிர்களின் தாக்கத்திற்கு பின், சருமத்தை ஆற்றவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. முதலில் முகத்தில் ஈரமான டவலை வைத்து பின்னர் தக்காளி கூழ் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால் நமது சரும ஆரோக்கியம் மேம்படும்.

எலுமிச்சை மற்றும் தேன் பயன்படுத்தி ஒரு மாஸ்க் செய்யலாம். எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சராக செயல்படுகிறது மற்றும் உடலில் இருந்து இறந்த செல்களை நீக்குகிறது. தேன் சேர்ப்பது நமது சருமத்திற்கு பொலிவை தரும். அந்த வகையில், எலுமிச்சை சாறு மற்றும் தென் கலந்து முகத்தில் தடவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.ஓட்ஸ் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டது. அதே வேளையில் மோர் ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. ஓட்ஸை மோரில் 5-10 நிமிடங்கள் ஊறவைத்து, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்திலோ அல்லது வேறு ஏதேனும் தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ள உடல் பாகத்திலோ தடவ வேண்டும். அதைக் கழுவுவதற்கு முன் அந்தப் பகுதியைத் துடைக்க வேண்டும். பின் அதனை நீரில் கழுவ வேண்டும்.

Kokila

Next Post

குளியலறையில் உள்ள ஈரப்பதத்தை நீக்க!... இந்த ஈஸியான டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Thu Jun 15 , 2023
குளியலறையில் இருந்து ஈரப்பதத்தை அகற்ற சில தாவரங்களின் உதவுகின்றன. அது என்ன தாவரங்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், வீட்டில் நடப்படும் செடிகளும் பூக்களால் வீட்டை நறுமணமாக்குகிறது. ஆனால் சில தாவரங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதோடு வீட்டின் சூழலையும் சுத்தப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. குளியலறையில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற உதவும் தாவரம் பற்றி பார்க்கலாம் வாங்க. […]

You May Like