வாட்ஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது அதில் உள்ள சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் செய்யும் பொழுது பயனர்கள் தங்களது போன் ஸ்கிரீனை ஷேர் செய்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை பயன்படுத்தி ஹோஸ்ட் தனது போன் ஸ்கிரீனில் தெரியக்கூடிய விஷயங்களை பிறருக்கு ஷேர் செய்யலாம். இது அலுவலக மீட்டிங் மற்றும் பிற விஷயங்களுக்கு ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும்.இந்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூகர் பெர்க் தனது பேஸ்புக் அக்கவுண்ட்டில் தெரிவித்தார்.
இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சத்தை பயன்படுத்தி பயனாளர்கள் டாக்குமெண்ட்களை ஷேர் செய்வது, பிரசன்டேஷன் மற்றும் பலவற்றை செய்வது போன்ற ஏராளமான விஷயங்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமல்லாமல் ஃபேமிலி மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆகியோருக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கவும் இந்த அம்சம் உதவியாக இருக்கும். உதாரணமாக, உங்கள் பெற்றோர் அவரது போன் செட்டிங்கில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது, நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் மூலமாக வீடியோ கால் செய்து அதில் உள்ள ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை பயன்படுத்துவதன் மூலமாக அவருக்கு நீங்கள் உதவி செய்யலாம். பயனர்கள் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தின் முழு கட்டுப்பாட்டையும் பெறுவார்கள். அதாவது ஸ்கிரீன் ஷேரிங் செய்வதை எந்த நேரத்திலும் பயனர்களால் நிறுத்த முடியும்.
இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் வீடியோ காலின் போது காணப்படும் ‘ஷேர்’ என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஷேர் செய்ய வேண்டுமா? அல்லது மொத்த ஸ்கிரீனை ஷேர் செய்ய வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். தற்போது வாட்ஸ்அப்பில் 32 பங்கேற்பாளர்களுடனான வீடியோ கால்கள் அனுமதிக்கப்படுகிறது. சிறிய அளவிலான மீட்டிங்கை வாட்ஸ்அப்பில் எளிதாக நடத்தலாம்.இந்த ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஷன் இதற்கு முன்பு பீட்டா டெஸ்டர்களுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது மெதுவாக எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும்.