fbpx

தங்கம், வைரங்களை சொந்த ஊரில் புதைத்து வைத்துள்ள சீமான்..!! ஆனால், வாடகைக்கே பணம் இல்லையாம்..!! பகீர் தகவலை கூறிய விஜயலட்சுமி..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் பாரதிராஜா, மணிவண்ணனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது சீமானுக்கு நடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, திருமணம் செய்து கொள்வேன் என உறுதிமொழியை அளித்து விஜயலட்சுமியுடன் சீமான் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார் என கடந்த 2011இல் பரபரப்பு புகாரை நடிகை தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 2013இல் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார் சீமான்.

இதற்கிடையே, சீமான் குறித்து விஜயலட்சுமி அவ்வபோது புகார்களை கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். அதில், தன்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறுகையில், விஜயலட்சுமி புகார் பற்றி திரும்ப திரும்ப பேசுவது கேவலமாக இருக்கிறது என்றார்.

இந்நிலையில் தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், வீரலட்சுமி பேசுகையில் “சீமான் கேவலத்தை பற்றி எல்லாம் நான் பேச மாட்டேன். அவர் 10 வருஷத்திற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் 20 ஆயிரத்திற்கும் அக்கா விஜயலட்சுமியின் காலடியில் கிடப்பார்.

அக்கா தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை என்னிடம் சொல்லியுள்ளார். அதாவது சுவிட்சர்லாந்து, ஜெனீவா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை கார்த்திக் மூலம் வைரத்திலான வாட்ச், தங்க நகைகள், வைரக்கல் பதித்த நகைகள் எல்லாம் சீமானுக்கு வருமாம். அதை இரவு போட்டு பார்த்துவிட்டு அடுத்த நாள் தாயாரின் சொந்த ஊரான இளையான்குடிக்கு போய் கொடுத்துவிடுவாராம்.

அந்த நகைகளை சீமானின் தாய், பூமிக்கு அடியில் புதைத்து வைத்துவிடுவாராம். அப்பவே அந்த நகைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும். இப்போது வரை வெளிநாடுகளில் இருந்து சீமானுக்கு நகைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியென்றால் அவரிடம் எத்தனை கோடி மதிப்பிலான நகைகள் இருக்கும் என கணக்கு போட்டு பாருங்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி பேசுகையில், சீமான் முகம் பதித்த தங்க செயின் போட்டிருக்கும் வீடியோவை உங்களுக்கு நான் காட்டியுள்ளேன். அதன் மதிப்பு 12 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம். இப்படி பல நகைகள் அவரிடம் உள்ளன. எல்லாத்தையும் வைத்துக் கொண்டு தன்னால் வாடகை கட்டவே பணமில்லை என்கிறார். எனவே, முதல்வர் ஸ்டாலின் சார், சீமான் வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு அனுப்புங்கள் என்றார்.

Chella

Next Post

உடலுக்கு மட்டுமல்ல காருக்கும் அறிகுறி தெரியும்..!! பிரேக் ஃபெயில்யரை முன்கூட்டியே அறிந்து விபத்தை தடுப்பது எப்படி..?

Thu Aug 31 , 2023
‘கார் பிரேக் ஃபெயில்யர்’ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கார் இயங்கும் வேகத்தை தடுத்து நிறுத்தும் பணியை செய்வதால் பிரேக் சிஸ்டம் இந்த பிரச்சனையை சந்திக்கிறது. கார் பிரேக் ஃபெயில்யரை பல சமயங்களில் முன்கூட்டியே யூகித்து விடலாம். பிரேக் ஃபெயில்யரை சந்தித்த ஒரு ஓட்டுனருக்கு அந்த சம்பவம் ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். இது உடனடியாகக் கண்டறிந்து கவனிக்கப்படாவிட்டால், கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும். ஒரு மெக்கானிக் போன்று, பிரேக் ஃபெயில்யருக்கான […]

You May Like