fbpx

தாடியுடன் சீமான்..!! இந்த புதிய லுக்கிற்கு காரணம் என்ன தெரியுமா..? எல்லாம் நல்ல செய்திதான்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென தனது லுக்கை மாற்றியது விவாதத்தை ஏற்படுத்திள்ளது.

பொதுவாக சீமான் பிட்டாக இருப்பார். மொத்தமாக ஷேவ் செய்திருப்பார். அதேபோல் முடி குறைவாக வைத்திருப்பார். ஆனால், இப்போது திடீரென தாடி வச்சு.. உடல் எடை போட்டு சீமான் தோற்றமே மாறியுள்ளது. அவரின் இந்த உருவ மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கேட்டு வருகின்றனர். அவருக்கு உடல் எடை பிரச்சனை எதுவும் உள்ளதா? அவர் ஏன் எடை அதிகமாகி உள்ளார் என்று பலரும் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

சீமான் தற்போது படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக சமூக வலைதள பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதே படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்காக சீமான் தனது லுக்கை மாற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்காக அவர் உடல் எடையை ஏற்றி தாடி வளர்த்து உள்ளார் என்று கூறப்படுகிறது. சீமான் சினிமாவில் நடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. , அவர் சினிமாவில் படம் இயக்கியும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில்தான் நீண்ட காலங்களுக்கு பின் கோலிவுட்டிற்கு சீமான் ரிட்டர்ன் ஆகி உள்ளார். இதற்காக அவர் தனது லுக்கை மாற்றி உள்ளார் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

அதிர்ச்சி..!! கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு..!! 52 பேர் பரிதாப பலி..!! 64 பேர் காயம்..!!

Mon Jan 29 , 2024
சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் எண்ணெய் வளம் மிக்க பகுதியான அபேயில் உள்ள கிராமவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 52 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், 64 பேர் காயமடைந்தனர் சனிக்கிழமை மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இது ஒரு நிலப் பிரச்சனையால் உருவாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அபியேயின் தகவல் மந்திரி புலிஸ் […]

You May Like