fbpx

வாரண்ட் இல்லாமல் சோதனையா..? அதிரடி காட்டிய ஐகோர்ட்..!! அப்செட்டான போலீசார்..!!

வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த அனுமதி இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் மதுபான விடுதி நடத்தி வருபவர் சுதர்சன் கவுடா. இவரது மதுபான விடுதி சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறி சமீபத்தில் கலால்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுதர்சன் கவுடாவின் மதுபான விடுதியில் சோதனை நடத்துவதற்கு, கோர்ட்டில் இருந்து போலீசார் எந்த ஒரு வாரண்டும் பெறவில்லை. இதையடுத்து, வாரண்ட் இல்லாமல் தனது மதுபான விடுதியில் சோதனை நடத்தியதால், கலால்துறை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் சுதர்சன் கவுடா வழக்கு தொடர்ந்தார்.

வாரண்ட் இல்லாமல் சோதனையா..? அதிரடி காட்டிய ஐகோர்ட்..!! அப்செட்டான போலீசார்..!!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மதுக்கடை, மதுபான விடுதிகளில் சோதனை நடத்துவதற்கு கலால்துறையினர் முறையான வாரண்ட் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. அது தற்போது மீறப்பட்டுள்ளது’ என்றார். இதையடுத்து, “மதுக்கடைகள், மதுபான விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தால், முறையான வாரண்ட் பெற்று தான் கலால்துறையினர் சோதனை நடத்த வேண்டும். வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால், சோதனை நடத்தி ஆவணங்களை பரிசீலிக்கலாம். விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால், அங்கிருக்கும் பொருட்களை ஜப்தி கூட செய்யலாம்” என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தாயின் இறுதிச்சடங்கு முடிந்து சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Fri Dec 30 , 2022
தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஹௌரா முதல் நியூ ஜெல்பைகுறி வரை இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி, மேற்குவங்கம் செல்வதாக இருந்தது. ஆனால், இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானதை தொடர்ந்து […]
தாயின் இறுதிச்சடங்கு முடிந்து சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

You May Like