நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு அப்பலதரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் ஒருவர் சீமானை “சார் நீங்களும் உங்க உறவினர் அருள்மொழிக்கு(சீமான் மனைவியின் உடன் பிறந்த அண்ணன்) கட்சியில் சீட்டு கொடுத்தாக ஒரு குற்றச்சாட்டு இருக்கே” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூற முடியாமல் திணறிய சீமான் “அவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கு, நீ நல்ல மனநல மருத்துவரை பாரு டா டேய். டேய் பைத்தியக்கார தனமா கேள்வி கேட்காத, அவன் திமுக அதிமுகவில் சீட்டு கொடுத்தா தான் வாரிசு, என்று மிரட்டும் வகையில் பதில் கூறினார்”.
கருத்து சுதந்திரம் என்று சொல்றீங்க கேள்வி கேட்டா பைத்தியக்காரன் என்று சொல்றீங்க என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்ப, “ஆமா உனக்கு பிரச்சனை இருக்கு எந்த ஒரு கேள்வியும் சரியாக கேட்ப்பதில்லை, யோவ் எதையாவது பேசாதையா, என்க மாமா திமுகவுல இருந்தாரு அதிமுகவுல இருந்தாரு, அவர் மகன் அவருக்கு சீட்டு கொடுத்தோம் அவரே வாரிசுனா, ‘ஏன் மகனா டா அவன்’ நீ உறுப்புடைய கேள்வி கேட்க மாற்ற, நீ இனிமே வராதா, உனக்கு எதுக்கு பதில் சொல்லணும், அன்றையில இருந்து பார்க்கிறேன் உனக்கு எதோ பிரச்சனை இருக்கு, தேவையில்லாத கேள்வி கேட்குறது” என்று ஒருமையில் பேசி இருந்தார் சீமான்.
மனைவியின் அண்ணனுக்கு சீட் கொடுத்தா அது வாரிசு அரசியல் இல்லை, இதே மத்தவர்கள் செய்தால் குற்றமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் தரக்குறைவாக பேசிய சீமானை மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியுள்ளது.