fbpx

47 வயதில் இரண்டாவது திருமணம்..? தயாரிப்பாளரை காதலிக்கும் நடிகை பிரகதி..? உண்மை என்ன..?

குணச்சித்திர நடிகை பிரகதி 2-வது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் காமெடியிலும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து அம்மா கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் பிரகதி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி போட்டோக்கள் பகிர்வது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என பிஸியாக இருந்து வருகிறார்.

பிரகதி தன்னுடைய இருபதாவது வயதில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து, தனி ஒருத்தியாக போராடி இன்று இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்திருக்கிறார். இந்நிலையில், டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை பிரகதி காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இந்த செய்தியால், கடுப்பான பிரகதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்ட தெலுங்கு தொலைக்காட்சியை காட்டமாக விமர்சித்துள்ளார். நடிகை என்பதற்காக ஏதாவது பேசலாமா என்றும் அந்த தொலைக்காட்சியை வன்மையாக கண்டித்துள்ளார்.

Chella

Next Post

மாணவர்களே ரெடியா..? மருத்துவ காலியிடங்கள்..!! கலந்தாய்வு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

Tue Oct 31 , 2023
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றுக்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதமான 1650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் […]

You May Like