fbpx

இரண்டாவதாக நியூசிலாந்து நாட்டில் பிறந்தது புத்தாண்டு.. வான வேடிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்ற மக்கள்..!!

உலகில் முதல் நாடுகளாக கிரிபாட்டி தீவுகளில் 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாடாக நியுசிலாந்த் நாட்டில் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான நாளாகும்.. பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும்… அதை வைத்துதான் புத்தாண்டு பிறந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.. அந்த வகையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கிறது.

அதற்கு அடுத்ததாக மாலை 4:30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்திருக்கிறது. இதை எடுத்து வான வேடிக்கை முழங்க ஒருவருக்கொருவர் கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வரவேற்று இருக்கின்றனர். புத்தாண்டு தினத்தை ஒட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நமக்கு 4.30 மணி என்றாலும் அங்கு நள்ளிரவு என்பதால் 11.59 மணிக்கு ஆரம்பித்த கவுண்டவுன் முடிந்து 12 மணி எட்டியதும் வான வேடிக்கை விண்ணை பிளந்தது. பூமியிலிருந்து விண்ணை நோக்கி சென்ற பட்டாசுகள் வெடித்துச் சிதறி உற்சாகம் தரும் புத்தாண்டை வரவேற்றன.

Read more :Yearender 2025 : ஹேமா கமிட்டி அறிக்கை முதல் அல்லு அர்ஜூன் கைது வரை.. இந்த ஆண்டு சினிமாவை திக்குமுக்காட வைத்த சர்ச்சைகள் ஒரு பார்வை..!!

English Summary

Second New Year was born in New Zealand.. People welcomed the new year with celestial fun.

Next Post

”பசங்க வளர்ந்துட்டாங்க”..!! ”இனிமே அது வேண்டாம்”..!! உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை நடுரோட்டில் குத்திக்கொன்ற காதலன்..!!

Tue Dec 31 , 2024
I was in a relationship with Panchali, who was living separately from her husband. So I persuaded her to give in to my desires.

You May Like