fbpx

மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா..!! 2000 ஆபாச வீடியோக்கள்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

பெண்கள் கழிப்பறைக்குள் மாணவிகளை அரை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்த மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியின் கழிப்பறைக்குள் இளம்பெண்களை வீடியோ எடுத்த மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிரிநகர் போலீசார் தரப்பில், கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சுபம் ஆசாத் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளான். வட மாநிலத்தை சேர்ந்த இவன், பெண்கள் கழிப்பறைக்குள் மாணவிகளை அரை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளான்.

மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா..!! 2000 ஆபாச வீடியோக்கள்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

முன்னதாக, கடந்த மாதம் மாணவிகளின் கழிவறையில் வீடியோ எடுக்கும்போது சக மாணவர்களிடம் சிக்கியுள்ளான். அப்போது கல்லூரி நிர்வாகம் கடுமையாக எச்சரித்து, மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல்விட்டது. ஆனால், அவன் நவம்பர் 18ஆம் தேதி மீண்டும் வீடியோ எடுத்துள்ளான். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது செல்போனில் 2,000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவற்றை முற்றிலும் நீக்கும் பணி நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆவின் பால் வேண்டுமா..? இனி இது கட்டாயம்..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

Wed Nov 23 , 2022
ஆவின் மாதாந்திர அட்டையுடன் ஸ்மார்ட் கார்டை இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டது. இதுவே மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.46 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் இங்கு குறைந்த விலைக்கு பாலை வாங்கிக் கொண்டு வெளியில் விற்று வருவதாக புகார்கள் வருகிறது. இதனை […]

You May Like