fbpx

ரகசிய ஆவணங்கள்..!! அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி கைது..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. கடந்த 2016 முதல் 2020 வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டிரம்ப் ஆஜரானார்.

இந்நிலையில், அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் டொனால்டு டிரம்ப், அவரது உதவியாளர் வால்ட் நவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே, ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை..!! மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு..!!

Wed Jun 14 , 2023
அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்துத்துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து […]

You May Like