நமது முன்னோர் 80 மற்றும் 90 வயதில் செய்த வேலைகளை நம்மால் 30 வயதில் கூட செய்ய முடிவதில்லை. அது மட்டும் இல்லாமல், நமது முன்னோர் நோய் இல்லாத வாழ்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், குழந்தைகளுக்கு கூட சுகர், பிரஷர், மாரடைப்பு போன்ற பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், நமது முன்னோர் இயற்கையான உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட்டு வந்தார்கள்.
ஆம், இயற்கையான சோளம், கம்பு, ராகி மற்றும் அரிசியை கூட வீட்டிலேயே பயிர் செய்து பயன்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக நமது முன்னோர் பின்பற்றிய அற்புதான். சாதத்தை வடித்து சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, சாதம் வடித்த கஞ்சியை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாகரீகம் என்ற பெயரில் குக்கருக்கு மாறி விட்டார்கள்.
சாதத்தை வடித்து சாப்பிடும் பழக்கம் இன்னும் ஒரு சிலரின் வீடுகளில் மட்டும் தான் உள்ளது. மேலும், பழைய சோறு வடித்த கஞ்சி என்றால் ஏதோ அருவருப்பான பொருளாக தான் இன்றைய தலைமுறையினர் பார்க்கின்றனர். ஆனால் அதின் அருமை இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் தெரிவதில்லை. மேலும் வடித்த சாதத்தில் கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
வடித்த சாதத்தின் கஞ்சியை குடிப்பதால், இறப்பை குடல் வளர்ச்சி பிரச்சினைகள் குணமாகும். புற்றுநோய் சம்பந்தமான செல்களின் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கலாம். மேலும், தற்போது உள்ள வெப்பநிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இரத்தக் கட்டு, வீக்கம் இருந்தால், உடனே இந்த வடித்த கஞ்சியுடன் சிறிது கல்லுப்பு சேர்த்து, ரத்த கட்டு வீக்கம் உள்ள இடங்களில் மிதமான சூட்டில் வைக்கலாம்.
இதனால் உடனடியாக நல்ல நிவாரணம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் வடித்த கஞ்சியை குடிக்கலாம். ஏனென்றால், இதில் கொழுப்பு அதிகம் இருக்கும்.