fbpx

ஃபோனில் வந்த ரகசிய தகவல்..!! பெண் போலீஸுடன் ஸ்பாட்டுக்கு விரைந்த தனிப்படை..!! 9 பெண்களை வைத்து பாலியல் தொழில்..!! சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புகாரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி 9 பெண்களை மீட்டனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முறையான அனுமதியில்லாமல், ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இங்கு, பெண்களை வைத்து விபச்சாரங்களும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா மற்றும் சலூனில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் சென்ற நிலையில், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி, புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனை கண்காணித்தோம். அப்போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பெண் காவலர்கள் உதவியுடன் ஸ்பா மற்றும் சலூனில் சோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அங்கு அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய அயனாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து ரூ.6,200 ரொக்கம், இரண்டு செல்போன்கள் மற்றும் 2 ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய 9 பெண்கள் மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்பா மற்றும் சலூனின் உரிமையாளரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 9 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ‘போக்சோவில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து’..!! தமிழ்நாடு அரசு அதிரடி

English Summary

Police conducted a raid and rescued 9 women in Chennai after a complaint was filed that they were operating a sex trade using women.

Chella

Next Post

உஷார்!. கூகுளில் போலி எண்; போலி வெப்சைட், QR கோடு!. மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

Tue Feb 18 , 2025
Beware!. Fake number on Google; Fake website, QR code!. How to protect yourself from scammers?

You May Like