fbpx

சின்னத்தை அறிவித்த சீமான்!! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பலத்தை காட்டுமா நாம் தமிழர்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அந்த தொகுதிக்கு ஜூன் 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவர் அபிநயா போட்டியிட இருக்கிறார். இவர் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் நின்றார்.

ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடித்திருந்தால் அபிநயாவை உடனே அந்த தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக சீமான் இறுதி இருக்கிறார். அபிநயாவுக்கு அந்த பகுதியில் இருக்கும் ஆதரவை கவனித்துக் கூட சீமான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்று கூறிய அவர், இத்தேர்தலுக்கு பின் தங்களுக்கு என தனிச் சின்னம் கேட்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சொல்லும் காரணங்களில் தான் உடன்படுவதாகவும் அவர் கூறினார்.

Read more ; ‘சுழற்றியடிக்கும் சூறாவளி’ வேரோடு சாய்ந்த மரங்கள்..!! சுக்கு நூறான கார்கள்!! அச்சத்தில் நியூ ஜெர்சி!!

English Summary

Seeman announced the symbol in the Vikravandi by-election

Next Post

டேய் எப்புட்றா!! "9 வருஷ இடைவெளியில் ஒரே இடத்தில் நிற்கும் பெண்" கூகுள் மேப்பில் சிக்கியது எப்படி..?

Sun Jun 16 , 2024
A woman who was in the street view of Google Maps, taken 9 years ago, is still standing in the same place. We are going to see about that incident.

You May Like