fbpx

விஜயலட்சுமியின் கருக்கலைப்புக்கு கையெழுத்துப் போட்ட சீமான்..? போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வற்புறுத்தலின்படி, 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், அவருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தவகையில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011ஆஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்யவில்லை.

தற்போது பாலியல் வழக்கில் அவரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, சீமான் கட்டாயத்தின் பேரில் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள் யார் என கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தவும், கருக்கலைப்பின் போது யாருடைய கையெழுத்து உள்ளது என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

’உங்களுக்கு அஜீரண கோளாறா’..? ’இந்த மருந்தை கையில் கூட தொடாதீங்க’..!! அரசு எச்சரிக்கை..!!

Fri Sep 8 , 2023
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும் அல்லது ஏதேனும் அசௌகரியம் இருந்தாலும் நாம் உடனே ஒரு ஸ்பூன் டைஜின் எடுத்து குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த மருந்தில் அமில எதிர்ப்பு பண்பு இருக்கிறது. எனவே இதை வாங்கி பலரும் குடிக்கின்றனர். ஆனால், அதுபோல் வாங்கி குடிக்க வேண்டாம் என்று அரசு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, வித்தியாசமான வாசனை கொண்டிருக்கும் இந்த […]

You May Like