தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அந்த புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது என்றும் விஜயலட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள் அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமான் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சும்மா பாலியல் குற்றவாளி என்று என்னை சொல்லாதீர்கள்.. அந்த நடிகை தான் பாலியல் தொழிலாளி, அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படி கூறுவீர்கள்? என்று ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு பேசிய நடிகை விஜயலட்சுமி ”நான் என்ன பாலியல் தொழிலாளியா? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்.. நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்? இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம் ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை என்ன செய்ய போகிறது என்பதை மட்டும் நீ பார்… என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சீமான் மாமா நான் பெங்களூருல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். உங்ககிட்ட ஆயிரம் சண்டை போட்டாலும், உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியும். 14 வருஷமாக நீங்க தான் என்னோட கணவருன்னு நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கேன். என் கடைசி மூச்சு வரைக்கும் நீங்க தான் என் கணவர்.
நான் உங்க கள்ளக்காதலி இல்ல. நீங்க யாருக்கும் பயப்பட வேண்டியதில்ல. பின்னாடி வந்தவங்களுக்கே இவ்வளவு Possessiveness இருக்குன்னா 2008ல இருந்து நீங்கதான் என் உயிருன்னு நினைச்சி வாழ்ந்துட்டு இருக்குற எனக்கு எப்படி இருக்கும். அது ஒன்னும் தப்பு கிடையாது. எனக்கு எதுக்கு இந்த தண்டனை. என்னால உங்கள பிரிஞ்சி வாழ முடியல. தயவு செஞ்சி என்கிட்ட பேசுங்க. கோர்ட், கேஸ், சண்டை, சச்சரவு எதுவும் தேவையில்லை. எனக்கு என்னுடைய கணவர் சீமான் தான் வேண்டும்.