fbpx

நாம் தமிழரின் கட்சியில் பொதுச் செயலாளர் ஆகிறார் கயல்விழி.?அப்போ வாரிசு அரசியலை ஒழிப்பது எல்லாம் பொய்யா.?

தமிழக அரசியலில் மாற்று அரசியல் கட்சியாக விளங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது ஆனால் மழை மற்றும் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுக்குழு வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பற்றி முக்கிய முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் நிறுவனராக சீமான் இருந்து வருகிறார். மேலும் அந்தக் கட்சியின் தலைவராகவும் அவரே இருக்கிறார் .

நாம் தமிழர் கட்சியில் பொதுச் செயலாளராக தடா சந்திரசேகர் என்பவர் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் மறைந்ததை தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக தலைவர் சீமானின் மனைவி கயல்விழி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

முன்னாள் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் மறைந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களில் கயல்விழி சீமான் கலந்து கொண்டு வருகிறார் . இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் வருங்கால பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்க படலாம் என்ற ஒரு கருத்தும் அந்த கட்சி வட்டாரங்களில் நிலவி வருகிறது. எனினும் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே முடிவு செய்யப்படும்.

Next Post

”டெல்லி திகார் சிறைக்கு அனுப்பிருவேன்”..!! ஓபிஎஸை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி..!!

Wed Dec 27 , 2023
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் மழை பெய்வதற்கு முன்பே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சியில் புயல், மழை காலங்களில் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. […]

You May Like