இந்திய ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டது. அதன்படி, இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடற்தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், திருத்தப்பட்ட முறைப்படி அக்னி வீரர்கள் தேர்வு செய்வதற்காக ராணுவத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, உடற்தகுதி நிலைகள் மற்றும் பிற தகுதிகளை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அக்னி வீரர் தேர்வின் முதல் படியான பொதுத்தேர்வு 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.