fbpx

தனக்குத் தானே போதை ஊசி..!! திடீரென சுருண்டு விழுந்த வாலிபர்..!! மொட்டை மாடியில் கிடந்த திடுக்கிடும் பொருட்கள்..!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கௌதம்ராஜ் (21). இவர், வண்டி குதிரைகளுக்கு முடிவெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கௌதம்ராஜுக்கு கஞ்சா, போதை ஊசி போட்டு கொள்வது ஆகிய பழக்கங்கள் இருந்து வந்துள்ளது. இதனால், அனுசுயா கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த பழக்கத்தில் இருந்து கௌதமாராஜால் வெளிவர முடியவில்லை. நேற்று முன்தினம் கௌதம்ராஜ் வீட்டிற்கு அவரது நண்பர்கள் சரவணன், ஸ்ரீதர் ஆகியோர் வந்துள்ளனர். வீட்டின் முன் பேசி கொண்டிருந்த மூவரும் அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் நண்பர்கள் பதறியடித்து கொண்டு கீழே வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த கதிர்வேலு என்பவரை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அனுசுயாவும் மேலே வந்த பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அங்கு, கௌதம்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே, அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நண்பர்கள் மற்றும் அனுசுயாவிடம் விசாரித்தபோது, மொட்டை மாடியில் போதை தரும் மருந்தை ஊசி மூலம் கையில் போட்டு கொண்டபோது கௌதம்ராஜ் மயங்கி விழுந்ததாக கூறியுள்ளனர். உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மொட்டை மாடியில் இருந்த டம்ளர், ஊசி, சிரிஞ்ச் ஆகியவற்றை கைப்பற்றினர். கௌதம்ராஜ்க்கு போதை ஊசி மருந்து எங்கிருந்து யார் மூலம் கிடைத்தது என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!

English Summary

It is said that Gauthamraj fainted when the drug was injected into his arm on the terrace.

Chella

Next Post

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை.. பிரதமரின் இன்டென்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ..

Wed Oct 9 , 2024
The central government has introduced a vocational training program for youths who will get an incentive of Rs.5 thousand per month. Under this scheme unemployed youth can apply for vocational training.

You May Like