fbpx

உரிமம் இல்லாமல் மருந்து விற்பனை!… அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!…

உரிமம் மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததற்காக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்குவதை முதன்மையாக பயன்படுத்துகின்றனர். அந்த இரு தளங்களிலும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் என்பது பிரதான எண்ணமாக மக்களிடையே இருக்கிறது. இந்தநிலையில், அதில் இந்நிறுவனங்கள் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததற்காக, அமேசான், பிளிப்கார்ட் மற்றும் டாடா 1எம்ஜி உள்ளிட்ட 20 இ-ஃபார்மசிகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சோமானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மீறியதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வது மருந்துகளின் தரத்தை பாதிக்கும் மற்றும் தவறான பயன்பாடு காரணமாக பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறிய இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் சோமானி, இ-ஃபார்மசிகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஓர் அரிய வாய்ப்பு!... மாநில அளவில் போட்டி!... பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

Sun Feb 12 , 2023
வரும் 13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் அதில் வெற்றிபெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் […]

You May Like