நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமமுக அட்ரஸ் இல்லாமல் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக டிடிவி தினகரன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”வினாச காலே விபரீத புத்தி என சொல்வார்கள். அதே போல அழிய போறவங்க தான் அடுத்தவங்களை பார்த்து அப்படி பேசுவாங்க. துரியோதன கூட்டம் என்றைக்கும் ஜெயித்ததல்ல. துரியோதனக் கூட்டம் எங்களை பார்த்து சொல்கிறது, அவர்கள் வீழ்வார்கள்.
அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறியது தொடர்பாகவும், அதிமுக ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு எனக்கு தெரிந்து ஒன்றிணைவதற்கு வாய்ப்பில்லை. சசிகலா எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொன்னார் என்று நீங்கள் அவங்க கிட்டதான் கேட்கணும. எந்த காரணத்தை கொண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை.
கோவையில் ஓபிஎஸ் மாநாடு நடத்துவது அவங்க நடத்துற நிகழ்ச்சி. அவங்க அழைத்தார்கள் என்றால் ? அதற்கு பிறகு யோசிப்போம். அடுத்த பிரதமர் மோடி தான் என செல்லுர் ராஜூ பேசியது பற்றி நீங்கள் அவங்க கிட்ட தான் கேக்கணும். அவரு பெரிய விஞ்ஞானி. அந்த விஞ்ஞானி பேச்சு சாதாரணம மக்களாகிய நமக்கெல்லாம் புரியாது. ஓபிஎஸ் உடனான நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்கிறது. அதிமுக – பாஜக ஒன்றாக இருந்தார்கள். இப்போது பிரிந்து இருக்கிறார்கள் அவளவுதான்” என தெரிவித்தார்.