செல்வ மகள் சேமிப்பு திட்டதிற்கான வரி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் 31ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள், அதாவது 6.5 சதவீதத்தில் இருந்து 6.25% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் மற்ற வங்கிகளும் ஹோம் லோன் விகிதத்தை குறைக்கும் சூழல் உள்ளது. இந்த வட்டி குறையும் போதெல்லாம் வங்கி சேமிப்பின் மற்ற வட்டிகளும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வரி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறதாம்.
ஆனால், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்து வந்தால், நல்ல லாபத்தை பெற முடியும். பொதுவாக ஒவ்வொரு காலாண்டிற்கும் சேமிப்பு திட்டங்களின் வட்டி மாற்றப்படும். ஆனால், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து இந்த வட்டி மாறவில்லை. எப்போதும் போல செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இதுதான் மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டிகளில் அதிகபட்சம் ஆகும்.
பிரதமர் மோடியால், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி செல்வ மகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்தாலும், அதில் ஒரு சிறப்பான திட்டம் என்றால், அது செல்வமகள் சேமிப்பு திட்டம் தான். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.