தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். அதேசமயம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வருவதால் ஜனவரி 10ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் உட்பட சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். இவ்வளவு பேருக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாது என்பதால், இன்று (ஜனவரி 9) மதியத்திற்கு மேல் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.