இந்த ஆண்டும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்றிருந்தால், அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டும் புதுச்சேரி கல்வித்துறை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது.